தட்டச்சு தேர்வு துவக்கம்

குமாரபாளையத்தில் தட்டச்சு தேர்வு துவங்கியது.;

Update: 2023-08-26 10:30 GMT

குமாரபாளையத்தில் நடந்த தட்டச்சு தேர்வு.

குமாரபாளையத்தில் தட்டச்சு தேர்வு துவங்கியது.

குமாரபாளையம், ஶ்ரீ ராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரியில் தமிழக அரசின் சார்பில் நடத்தப்படும் இரண்டு நாட்கள் தட்டச்சு தேர்வு நேற்று துவங்கியது. ஆக.26 மற்றும் 27 ஆகிய நாட்களில் நடைபெறும் இந்த தேர்வில், ஈரோடு, நாமக்கல், சேலம் ஆகிய மாவட்டங்களில் இருந்து மொத்தம் இரண்டாயிரத்து 150 மாணவ மாணவிகள் தேர்வில் பங்கேற்கவுள்ளனர்.

ஆங்கிலத்தில் மொத்தம் ஆயிரத்து 91 மாணவ, மாணவிகள். அதில், இளநிலையில் 868 மாணவ/ மாணவிகளும், முதுநிலையில் 523 மாணவ, மாணவிகளும் பங்கேற்கின்றனர்.

தமிழில் மொத்தம் 759 மாணவ, மாணவிகள். அதில் இளநிலையில் 447ம், முதுநிலையில் 312 மாணவ மாணவிகளும் பங்கேற்கின்றனர். கல்லூரி முதல்வர் விஜயகுமார் தேர்வு முதன்மை கண்காணிப்பாளராக பங்கேற்று ஆய்வு மேற்கொண்டார். தட்டச்சு தேர்வில் அனைத்து மாணவ மாணவிகளும் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.

குமாரபாளையம் நகராட்சியில் தமிழக முதல்வர் உத்தரவுக்கிணங்க, நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தில், என் குப்பை எனது பொறுப்பு மற்றும் பொதுமக்கள் பங்களிப்போடு நகரங்களை பொது இடங்களை தூய்மை செய்தல் பணி நடைபெற்று வருகிறது. பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் உருவாகும் மக்கும் மக்காத குப்பைகளை தரம் தரம் பிரித்து கொடுத்தல், நெகிழி பயன்பாடு தடை பற்றியும், அதற்கு மாற்று பொருளாக துணிப் பைகள் பாத்திரங்கள் பயன்படுத்துதல் பற்றியும், திறந்த வெளி கழிப்பிடத்தை பயன்படுத்த தடை மற்றும் சுற்றுச்சூழல் சுற்றுச்சூழலை பாதுகாக்க மரக்கன்று நடுதல் பற்றியும், எடுத்துரைக்கப்படுகிறது. நகராட்சி ஆணையர் (பொ) ராஜேந்திரன் உத்தரவின் படி ராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரியில், முதல்வர் விஜயகுமார் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சுகாதார அலுவலர் ராமமூர்த்தி பங்கேற்று, மாணவ, மாணவியர்களிடையே சுகாதார பணிகள் மேற்கொள்ளுதல் குறித்து விளக்கவுரையாற்றினார். துப்புரவு ஆய்வாளர்கள் செல்வராஜ், சந்தானகிருஷ்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News