விசைத்தறிகளை இயக்க அனுமதி கோரி வட்டாட்சியர் அலுவலகத்தில் தொழிற்சங்கத்தினர் மனு

தமிழக அரசின் வழிகாட்டுதல், கட்டுப்பாடுகளுடன் தறிகளை இயக்க அனுமதி தரவேண்டும் என்று, நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்கம் சார்பில் குமாரபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.;

Update: 2021-06-16 14:11 GMT

குமாரபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள் மனு அளிக்க காத்திருந்தபோது

நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்கம் சார்பில்  குமாரபாளையம் வட்டாட்சியர் அலுவலக அதிகாரிகளை சந்தித்து இன்று  மனு கொடுக்கப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:

தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. குமாரபாளையத்தில்  கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக இருந்ததால், தளர்வுகள் இல்லாத ஊரடங்கு அறிவிக்கப்பட்டது  இதனால், குமாரபாளையத்தில் பிரதான தொழிலாக இருக்கும் விசைத்தறி தொழிலை நம்பி வாழும் தொழிலாளர்கள்,   விசைத்தறிகள்  இயங்காததால் வேலையிழந்து, பொருளாதார சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

விசைத்தறி உபதொழில்களான ஆசாரி பட்டறை, ஒர்க்ஷாப் ஸ்பேர் பார்ட்ஸ் கடைகள் உள்ளிட்ட அனைத்து தொழில்களும் முடக்கப்பட்டுள்ளது. வீட்டு வாடகை, தறி வாடகை, மின் கட்டணம், பட்டறை பாக்கியை மகளிர் குழு கடன்கள், வங்கிக் கடன்கள், கந்துவட்டி, நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி போன்ற நெருக்கடிகள் அதிகமாக உள்ளன.

எனவே கடும் பொருளாதார பாதிப்பில் தவிக்கும் தொழிலாளர்கள் மீண்டுவர, குமாரபாளையத்தில் தமிழக அரசின் வழிகாட்டுதலோடு பாதுகாப்பு அம்சங்களுடன் மீண்டும் விசைத்தறி கூடங்களை திறக்க அனுமதிக்க வேண்டும். கொரோனா நிவாரணமாக விசைத்தறி சார்ந்த தொழிலாளர்கள் அனைவருக்கும் ₹7500 நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்று, மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News