திருச்செங்கோட்டில் ஓ.பி.எஸ். அணியினரின் ஆலோசனை கூட்டம்
திருச்செங்கோட்டில் ஓ.பி.எஸ். அணி சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.;
திருச்செங்கோட்டில் ஓ.பி.எஸ். அணி சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
ஓ.பி.எஸ். அணி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆலோசனை கூட்டம் திருச்செங்கோட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் மேற்கு மாவட்ட செயலர் நாகராஜன், அவை தலைவர் மணி தலைமையில் நடைபெற்றது. ஏப். 24ல் திருச்சியில் நடைபெறவுள்ள மாநாட்டிற்கு அதிக அளவிலான தொண்டர்களை அழைத்து செல்வது, கட்சியில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது, நலத்திட்ட உதவிகள் செய்வது, மூத்த நிர்வாகிகளுக்கு மரியாதை செலுத்துதல், என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் நாமக்கல் மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட மாவட்ட கழக, ஒன்றிய கழக நகரக் கழக, பேரூர் கழக, சார்பு மன்ற செயலாளர்கள் கூட்டத்திற்கு மாவட்ட கழக துணைச் செயலாளர் மோகன், மாவட்ட விவசாய அணி செயலாளர் சுப்பிரமணி, மாவட்ட நெசவாளர் அணி செயலாளர் ராமரத்தினம், மாவட்ட எம் ஜி ஆர் மன்ற செயலாளர் ராஜமாணிக்கம், இணைச்செயலாளர் வெங்கிட்டு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் பள்ளிபாளையம் வடக்கு ஒன்றியகழகச் செயலாளர் தனபால், தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் சண்முகம், குமாரபாளையம் நகர கழக நிர்வாகிகள் தலைவர் லோகநாதன், துணைச்செயலாளர் பழனிச்சாமி, பொருளாளர் ஸ்ரீதர்,மாவட்டபிரதிநிதி சீனிவாசன் திருச்செங்கோடு தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஈஸ்வரன், திருச்செங்கோடு நகர கழக செயலாளர் ஜெயராஜ், துணைச் செயலாளர் மோகனசுந்தரம், மல்லசமுத்திரம் பேரூர் கழகச செயலாளர் மூர்த்தி, மல்லசமுத்திரம் கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் பழனிவேல், மல்ல சமுத்திரம் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் மாதேஸ்வரன் எலச்சிபாளையம் மேற்கு ஒன்றிய கழற் செயலாளர் வீரமணி, பரமத்தி வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் பாலுசாமி, பரமத்தி தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் ராஜா என்கிற ராஜசேகரன், பரமத்தி பேரூர் கழகச் செயலாளர் செந்தில்குமார் வேலூர் பேரூர் கழகச் செயலாளர் ரகுராமன், போத்தனூர் பேரூர் கழகச் செயலாளர் கோபாலகிருஷ்ணன், கபில கபிலர்மலை ஒன்றிய கழக பொறுப்பாளர் சுரேஷ், திருச்செங்கோடு நகர வார்டு கழக செயலாளர்கள் ராஜவேல், பூபதி, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
திருச்செங்கோடு தொகுதி பொதுக்குழு உறுப்பினர் சசிகுமார் நன்றி கூறினார்.