குமாரபாளையத்தில் அனுமதியின்றி மது விற்பனை செய்த மூவர் கைது

குமாரபாளையத்தில் அனுமதியின்றி மது விற்பனை செய்ததாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2023-04-11 11:30 GMT

Salem Rowdy

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் அனுமதி இல்லாமல் மது விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் ரவி, எஸ்.ஐ. தங்கவடிவேல் உள்ளிட்ட போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர்.

ஜே.கே.கே. பங்களா அருகே தேவூரை சேர்ந்த ஜெகதீஸ்வரன், 27, கே.ஓ.என். தியேட்டர் பஸ் நிறுத்தம் அருகே முருகன், 58, எம்.ஜி.ஆர்.நகர் அருகே ஏகாம்பரம், 55, ஆகியோர் மது விற்பனை செய்து கொண்டிருந்தனர். அவர்களை கையும் களவுமாக பிடித்த போலீசார் இவர்கள் மூவரையும் கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர். இவர்களிடமிருந்து 26 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

Similar News