நிதி நிறுவனங்களிடம் வாங்கிய கடன் சுமை குறித்து பொதுமக்களுக்கு தைரியம் கூறிய இன்ஸ்பெக்டர்!
குமாரபாளையம் நிதி நிறுவனங்களிடம் வாங்கிய கடன் சுமை குறித்து பொதுமக்களுக்கு இன்ஸ்பெக்டர் தைரியம் கூறினார்.
நிதி நிறுவனங்களிடம் வாங்கிய கடன் சுமை குறித்து பொதுமக்களுக்கு தைரியம் கூறிய இன்ஸ்பெக்டர்
குமாரபாளையம் நிதி நிறுவனங்களிடம் வாங்கிய கடன் சுமை குறித்து பொதுமக்களுக்கு இன்ஸ்பெக்டர் தைரியம் கூறினார்.
குமாரபாளையம் பகுதியில் பல நிதி நிறுவனங்களில் கடன் வாங்கிய பொதுமக்கள், அதனை திருப்பி செலுத்த முடியாமல் தற்கொலை செய்து கொள்ளுதல், தற்கொலைக்கு முயற்சி செய்தல், உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வந்தனர். இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபட வேண்டாம் என, தினம் ஒரு பகுதி என, ஏழை தொழிலாள பொதுமக்களிடம் குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் தவமணி தைரியம் கூறி வருகிறார். இத ஒரு கட்டமாக பஸ் ஸ்டாண்ட் அருகே ராஜாஜி குப்பம் பகுதியில் இந்த ஆலோசானை கூட்டம் நடந்தது. இவர் பேசியதாவது :
குடும்ப சூழ்நிலைக்கு கடன் வாங்கிய நீங்கள், உரிய காலத்தில் கடனை திருப்பி செலுத்த முடியாமல் போகும் நிலை பலருக்கும் உருவாகிறது. இதற்காக தற்கொலை என்பது தீர்வு ஆகாது. நிதி நிறுவன அதிகாரிகள் உங்களை வந்து கேட்டால், போலீஸ் ஸ்டேஷன் வந்து எங்களிடம் கூறுங்கள். அவர்களிடம் பேசி சுமுக தீர்வு காணலாம். அதற்காக தவறான முடிவுக்கு போக வேண்டாம். உங்கள் பிள்ளைகள் வேலைக்கு செல்லும் போது, அங்கு சில கடைகளில் புகையிலை பொருட்கள் வாங்கி உண்ணும் பழக்கத்திற்கு ஆளாகலாம். அது போல் ஆகாமல் பார்த்து கொள்ளுங்கள்.அப்படி யாராவது புகையிலை பொருட்கள் விற்றால் எங்களுக்கு தெரிவியுங்கள். உடனடி நடவடிக்கை மேற்கொள்கிறோம்.
இவ்வாறு அவர் பொதுமக்களிடம் பேசினார்.
ஆண்களும், பெண்களும் பெருமளவில் பங்கேற்று இன்ஸ்பெகடர் கூறியதை கேட்டு, இனி உங்கள் சொற்படி நடந்து கொள்கிறோம், என உறுதி கூறினார்கள்.
குமாரபாளையம் நிதி நிறுவனங்களிடம் வாங்கிய கடன் சுமை குறித்து பொதுமக்களுக்கு இன்ஸ்பெக்டர் தவமணி தைரியம் கூறினார்.