குமாரபாளையத்தில் கதவை தாழிட்ட குழந்தை பத்திரமாக மீட்பு
குமாரபாளையத்தில் கதவை தாழிட்ட குழந்தையை தீயணைப்பு மற்றும் மீட்டுப்படையினர் பத்திரமாக மீட்டனர்.;
குமாரபாளையத்தில் கதவை தாழிட்ட குழந்தை.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் திருவள்ளுவர் வீதியில் வசிப்பவர் சுரேஷ், 34. கூலித் தொழிலாளி. இவரது இரண்டு வயது குழந்தை அனன்யா.
நேற்று மாலை 05:40 மணியளவில் குழந்தை வீட்டில் விளையாடிக்கொண்டு இருந்தது. வீட்டிற்குள் இருந்த அறையின் கதவை தாழிட்டுக் கொண்டதால் , கதவை திறக்க முடியாததால் அழுதது. அழுகை சத்தம் கேட்ட குடும்பத்தினர் ஓடி வந்து பார்த்த போது, அறையின் உள்ளே அழுதபடி இருந்தது.
இது குறித்து குமாரபாளையம் தீயணைப்பு மற்றும் மீட்புப்படையினருக்கு தகவல் தரப்பட்டது. நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையில் வந்த குழுவினர், ஜன்னல் கம்பியை பிளேடால் அறுத்து குழந்தையை பத்திரமாக மீட்டனர். இதன் பின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் நிம்மதியடைந்தனர்.