குமாரபாளையத்தில் கள்ளச்சாராய விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி
குமாரபாளையத்தில் கள்ளச்சாராய விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.;
குமாரபாளையத்தில் கள்ளச்சாராய விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
கள்ளச்சாராயத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி குமாரபாளையம் பஸ் ஸ்டாண்டில் தாசில்தார் சண்முகவேல் தலைமையில் நடைபெற்றது. கள்ளச்சாராயத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து பாடல்கள் மூலமும், வசனங்கள் மூலமும் நடித்து காட்டி சேலம் ரேவதி கலைக்குழுவினர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இது குறித்து பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன.
இந்த நிகழ்ச்சி காவேரி நகர், பள்ளிபாளையம் பிரிவு சாலை, கவுரி தியேட்டர் பிரிவு சாலை, ராஜம் தியேட்டர் பிரிவு, ஆனங்கூர் பிரிவு உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்றது. பொதுமக்கள் திரண்டு நின்று இந்த நிகழ்ச்சியை கண்டு விழிப்புணர்வு பெற்றனர். இன்ஸ்பெக்டர் ரவி, எஸ்.ஐ சந்தியா, துணை தாசில்தார் ரவி, ஆர்.ஐ. முருகேசன், வி.ஏ.ஓ. ஜனார்த்தனன் உள்பட பலர் பங்கேற்றனர்.
நாமக்கல் மாவட்டத்தில் கள்ளச் சாராயத்தை ஒழிப்பதற்கு, சாராயம் காய்ச்சுபவர்கள், மதுப்பழக்கத்துக்கு அடிமையானவர்களை மீட்டு, நல்வழிப்படுத்தி, அரசு மானியத்துடன் கடனுதவி வழங்கி மறுவாழ்வு அளிக்கும் நோக்கில், மாவட்ட மதுவிலக்கு துறை சார்பில், நாடகக் கலைஞர்களைக் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
கிராமியப் பாடல்கள் பாடியும், நடனமாடியும், சிறு நாடகம் நடத்தியும், கட்டைக்கால் ஏணிக்கால் பூட்டிக்கொண்டு நடனமாடியும், கள்ளச் சாராயத்தினால் ஏற்படும் தீமைகள், மதுப்பழக்கத்தினால் சமூக, குடும்பத்தில் ஏற்படும் பிரச்னைகள், உயிரிழப்புகள், பொருளாதார பாதிப்புகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.