குமாரபாளையம் அருகே ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ள இடத்தை ஆய்வு செய்த ஆர்.டி.ஓ.
குமாரபாளையம் அருகே ஆர்.டி.ஓ. பங்கேற்று ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ள இடம் குறித்து ஆய்வு செய்தார்.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் கடந்த ஆறு ஆண்டுகளாக ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் பிப்ரவரக 5ம் தேதி நடைபெறுவதாக கூறப்படும் நிலையில், நேற்று திருச்செங்கோடு கோட்டாச்சியர் கவுசல்யா, ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தை ஆய்வு செய்தார்.
போட்டிகள் நடத்தும் குமாரபாளையம் ஜல்லிக்கட்டு பேரவை செயலர் ராஜ்குமார், அதிகாரிகளிடம் போட்டிகள் நடைபெறும் இடம், பார்வையாளர்கள் அமரும் இடம், கால்நடைகள் இருக்கும் இடம், வாடிவாசல் அமைக்கவிருக்கும் இடம், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து எடுத்துரைத்தார். பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த கோரி அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
இதில் கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் அருண் பாலாஜி, டி.எஸ்.பி. மகாலட்சுமி, தாசில்தார் சண்முகவேல், இன்ஸ்பெக்டர் ரவி, கால்நடை மருத்துவர் செந்தில்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.