குமாரபாளையத்தில் மாயமான கல்லூரி மாணவி மீட்பு: கிரைம் செய்திகள்
குமாரபாளையத்தில் மாயமான கல்லூரி மாணவியை போலீசார் மீட்டுள்ளனர். இன்றை கிரைம் செய்திகள்...;
பைல் படம்.
ஈரோடு, தாளவாடி பகுதியை சேர்ந்தவர் சையது பக்ஸ், 36. புளி வியாபாரி. இவரது 17 வயது மகள் குமாரபாளையம் அருகே தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். ஜன. 7ல் கல்லூரி விடுதி காப்பாளர் போன் செய்து மதிய வேளை முதல் உங்கள் மகள் காணவில்லை என்று கூறியுள்ளார். மேலும் நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை.
பின்னர் விசாரணை செய்ததில், தாளவாடியை சேர்ந்த சுப்பண்ணா மகன் லிங்கராஜ் என்பவர், பெண்ணை அழைத்து சென்றது தெரியவந்தது. இது குறித்து சையது பக்ஸ் குமாரபாளையம் போலீசில் புகார் செய்து, தன் மகளை கண்டுபிடித்து தருமாறு கேட்Iக்கொண்டார்.
இது குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து தலைமறைவான இருவரையும் தேடி வந்தனர். இந்நிலையில் இவர்கள் சென்னையில் உள்ளதாக தகவல் கிடைத்தது. எஸ்.ஐ. மலர்விழி, எஸ்.ஐ. சேகரன் தலைமையிலான போலீசார் நேரில் சென்று பெண்ணை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். தலைமறைவான லிங்கராஜை போலீசார் தேடி வருகின்றனர்.
அடையாளம் காணப்பட்ட ஆற்றில் இறந்த பெண்
குமாரபாளையம் காவிரி ஆறு, பழைய காவிரி பாலம் மையப்பகுதியின் அடியில் பெண்ணின் சடலம் தண்ணீரில் கிடப்பதாக இரண்டு நாட்களுக்கு முன் பொதுமக்கள் போலீசில் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற குமாரபாளையம் போலீசார், சடலத்தை மீட்டனர்.
சுமார் 55 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் எப்படி ஆற்றில் வந்தது? தற்கொலையா? யாராவது கொலை செய்து ஆற்றில் போட்டு விட்டனரா? என போலீசார் விசாரணை செய்து வந்தனர். குமாரபாளையம் போலீசார் இது குறித்து விசாரணை செய்து யார் என்பதை கண்டுபிடித்தனர்.
இவர் குருசாமிபாளையம் கங்கராஜ், 43, என்பவரின் மனைவி மலர்க்கொடி, 34, என்பதும், இவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதும், மலர்கொடியின் அம்மா சரஸ்வதியின் வீடு, குமாரபாளையம் பெராந்தர்காடு பகுதியில் உள்ளதாகவும், அங்கு வந்த போது, நான் இனி வரமாட்டேன் என்று கூறி, வெளியில் சென்றவர் இது போல் செய்து கொண்டார் என்பதும் தெரியவந்தது.
டூவீலர்கள் மோதிய விபத்தில் ஒருவர் படுகாயம்
குமாரபாளையம் சேலம் சாலை பெட்ரோல் பங்க் எதிரில் பழக்கடை வைத்து தொழில் செய்து வருபவர் சிவபிரகாசம், 65. இவர் நேற்றுமுன்தினம் காலை 10:30 மணியளவில் தமிழ்நாடு விடுதி அருகே சாலையை ஹோண்டா டியோ வாகனத்தில் கடந்த போது, அவ்வழியே வேகமாக இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் மோதியதில் சிவபிரகாசம் பலத்த காயமடைந்தார்.
இவர் பவானி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். குமாரபாளையம் போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கு காரணமான குமாரபாளையம் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் மாணவர் ஹரி, 18, என்பவரை பிடித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.