குமாரபாளையத்தில் இலவச வீட்டுமனை வேண்டி தாசில்தாரிடம் மனு

இலவச வீட்டுமனை வேண்டி குமாரபாளையம் தாசில்தாரிடம் ஜனநாயக மக்கள் கழகம் சார்பில் மனு கொடுக்கப்பட்டது.;

Update: 2023-03-27 11:30 GMT

இலவச வீட்டுமனை வேண்டி குமாரபாளையம் தாசில்தாரிடம் ஜனநாயக மக்கள் கழகம் சார்பில் மனு கொடுக்கப்பட்டது.

குமாரபாளையம் தாலுகா அலுவலகத்தில், ஜனநாயக மக்கள் கழகம் சார்பில் இலவச வீட்டுமனை வேண்டி அதன் தலைவர் கண்ணன் தலைமையில் தாசில்தார் சண்முகவேலிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. இதனை பெற்றுக்கொண்ட தாசில்தார் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

இதுகுறித்து கண்ணன் கூறியதாவது: இது குறித்து மாவட்ட கலெக்டர் வசமும் கொடுத்துள்ளோம். எந்த நடவடிக்கையும் இல்லை. மேலும் தாமதம் செய்தால் பல போராட்டங்கள் நடத்த உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் நிர்வாகிகள் குமார், குழந்தைவேல், மூர்த்தி, சுந்தரராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News