பள்ளிபாளையம்: வள்ளி கும்மி ஆட்டம் அரங்கேற்றம்
பள்ளிபாளையத்தில் பாரம்பரிய கலைக்குழுவினரின் வள்ளி கும்மி ஆட்டம் அரங்கேற்ற விழா நடைபெற்றது.;
வள்ளி கும்மி ஆட்டத்தில் கலந்து கொண்டவர்கள்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் திருச்செங்கோடு சாலையில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில், பாரம்பரிய கலைக்குழுவினரின் சார்பில் வள்ளி கும்மி ஆட்ட அரங்கேற்ற விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் மின்சார துறை அமைச்சரும், குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினருமான தங்கமணி மற்றும் திரைப்பட நடிகர் ரஞ்சித் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வை துவக்கி வைத்து பேசிய குமாரபாளையம் எம்எல்ஏ .தங்கமணி, அழிந்து வரும் பாரம்பரிய கலைகளை காப்பாற்றுவது நம்முடைய கடமையாகும். அந்த வகையில் பாரம்பரிய கலை குழுவினரின் வள்ளி கும்மி ஆட்டம் அரங்கேற்ற விழா வரவேற்கத்தக்க ஒன்று எனவும், தமிழகம் முழுவதும் இதுபோல தமிழர்களின் பாரம்பரியமாக உள்ள அனைத்து கலைகளையும் மீட்டெடுக்கும் முயற்சிகளை நாம் மேற்கொள்ள வேண்டும் என கேட்டு நிகழ்ச்சியை வாழ்த்தி பேசினார். திரைப்பட நடிகர் ரஞ்சித் பேசும் பொழுது, இந்த நிகழ்வில் பங்கேற்பது மிகுந்த மகிழ்ச்சியை தருவதாகவும், கும்மி ஆட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தார். சுமார் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு வள்ளி கும்மி ஆட்ட அரங்கேற்ற விழாவை சிறப்பித்தனர்.