குமாரபாளையத்தில் போதைக்கு எதிரான ஒரு கோடி கையெழுத்து இயக்கம்
குமாரபாளையத்தில் போதைக்கு எதிரான ஒரு கோடி கையெழுத்து இயக்கம் செயல்படுத்தப்பட்டது.;
குமாரபாளையத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் போதைக்கு எதிரான ஒரு கோடி கையெழுத்து இயக்கம் செயல்படுத்தப்பட்டது.
தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்தகோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் பிப்ரவரி 12 முதல் 27ம் தேதி வரை மாநிலம் முழுதும் ஒரு கோடி கையெழுத்து இயக்கம் நடைபெறுகிறது.
இதில் ஒரு கட்டமாக குமாரபாளையம் அருகே ஜே.கே.கே. நடராஜா கல்லூரி முன்பு நேற்று கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. வக்கீல் கார்த்திகேயன் கையெழுத்திட்டு துவக்கி வைத்தார். இதில் மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் பங்கேற்று கையெழுத்திட்டனர். நிர்வாகிகள் ஒன்றிய செயலர் ராஜ்தேவ், மாவட்ட செயலர் மணிகண்டன் உள்பட பலர் பங்கேற்றனர்.