குமாரபாளையம் அருகே ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து

குமாரபாளையம் அருகே ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்துகுள்ளானது.;

Update: 2023-04-23 02:16 GMT

குமாரபாளையம் அருகே கவிழ்ந்து விபத்துகுள்ளான ஆம்னி பஸ்.

சென்னையிலிருந்து கோவை நோக்கி ஆம்னி பஸ் ஒன்று  சென்று கொண்டிருந்தது. குமாரபாளையம் அருகே பச்சாம்பாளையம் பகுதியில் வந்த போது, நிலைதடுமாறி சாலை ஓரமாக இருந்த பள்ளத்தில் பஸ் கவிழ்ந்தது.

இதில், பஸ்ஸில் பயணம் செய்த பியூலா, பிரான்சிஸ், முத்து, அலெக்ஸ்சாண்டர், பிரபாகரன், மதுபாலா ஆகிய ஆறு பேர் படுகாயமடைந்தனர். இவர்கள் குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து வெப்படை போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்து நடந்தது எப்படி? என்பது பற்றி விசாரணை செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News