குமாரபாளையம் அரசு பள்ளியில் எண்ணும் எழுத்தும் விழா
குமாரபாளையம் மேற்கு காலனி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் எண்ணும் எழுத்தும் கற்றலை கொண்டாடுவோம் விழா தலைமை ஆசிரியை கவுசல்யாமணி தலைமையில் நடைபெற்றது.;
குமாரபாளையம் மேற்கு காலனி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் எண்ணும் எழுத்தும் விழா நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் மேற்கு காலனி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் எண்ணும் எழுத்தும் கற்றலை கொண்டாடுவோம் விழா தலைமை ஆசிரியை கவுசல்யாமணி தலைமையில் நடைபெற்றது.
ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் திட்டத்தின் சிறப்புகளை பள்ளியின் இடைநிலை ஆசிரியை சத்யா விளக்கி கூறினார்கள். அரும்பு, மொட்டு, மலர் என்ற மூன்று பிரிவுகளில் செயல்வழி கற்றல், ஆடல், பாடல், கதை சொல்லுதல், உள்பட மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் எளிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. வட்டார கல்வி அலுவலர் குணசேகரன், பி.டி.ஏ. நிர்வாகி ரவி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் கனகராஜ், வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனர் கணேஷ்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.