வெள்ளம் பாதித்த மக்களை சந்தித்து அறுதல் கூறிய அமைச்சர்
குமாரபாளையம் காவிரி வெள்ள பாதிப்பு பகுதிகளில் மக்களை சந்தித்து அமைச்சர், கண்காணிப்பு அலுவலர் மற்றும் கலெக்டர் ஆறுதல் கூறினார்கள்;
குமாரபாளையம் காவிரி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 161 குடும்பங்களை சேர்ந்த 436 பேர் புத்தர் தெரு நகராட்சி பள்ளி, நகராட்சி நடராஜா திருமண மண்டபம், சின்னப்பநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி ஆகிய மூன்று இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களை சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், வெள்ள பாதிப்பு கண்காணிப்பு அலுவலர் டாக்டர் மகேஸ்வரன், மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்கள்.
அப்போது அமைச்சர் மதிவேந்தன் செய்தியாளர்களிடம் கூறுகையில், குமாரபாளையம், பள்ளிபாளையம், திருச்செங்கோடு, பரமத்தி வேலூர் பகுதியில் காவிரி கரையோர பகுதி மக்கள் மழை மற்றும் காவிரி வெள்ளத்தால் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு தேவையான உணவு, மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. மாற்று இடம் கேட்டுள்ளனர். அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது. ஓராண்டிற்குள் பணி முடிந்ததும், விண்ணப்பங்களின் பரிசீலனை அடிப்படையில் வீடுகள் ஒதுக்கி தரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நாமக்கல் மாவட்ட தி.மு.க. செயலர் மூர்த்தி, நகர தி.மு.க. செயலர் செல்வம், கவுன்சிலர் ரங்கநாதன், அம்பிகா, உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.