குமாரபாளையத்தில் மே தினவிழா கொண்டாட்டம்: முன்னாள் அமைச்சர் தங்கமணி பங்கேற்பு

குமாரபாளையத்தில் நடைபெற்ற மே தினவிழா கொண்டாட்டத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணி பங்கேற்றார்.;

Update: 2023-05-01 12:00 GMT

குமாரபாளையத்தில் மே தின விழாவையொட்டி கவுரி தியேட்டர் பஸ் நிறுத்தம் அருகே சுமை தூக்கும் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் முன்னாள் அமைச்சர் தங்கமணி தொழிற்சங்க கொடியை ஏற்றி வைத்தார்.

குமாரபாளையத்தில் மே தின விழாவையொட்டி அ.தி.மு.க. சார்பில் கவுரி தியேட்டர் பஸ் நிறுத்தம் அருகே சுமை தூக்கும் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் தொழிற்சங்க கொடியேற்றி வைத்து, தொழிலாளர்களுக்கு துண்டுளையும் இனிப்புகளையும் முன்னாள் அமைச்சர் தங்கமணி வழங்கினார். நகர செயலர் பாலசுப்பிரமணி, நிர்வாகிகள் திருநாவுக்கரசு , ரவி, அர்ச்சுனன் உள்பட பலர் பங்கேற்றனர்.

ஜே.கே.கே. சாலையில், தொழிலாளர் நலவாரியம் அலுவலகம் அருகே நடைபெற்ற விழாவில் நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, சரஸ்வதி தொழிற்சங்க கொடியினை ஏற்றி வைத்தனர். மக்கள் நீதி மையம் மகளிரணி செயலர்கள் சித்ரா, மல்லிகா, நிர்வாகிகள் சுந்தர்ராஜன், சுந்தரமூர்த்தி, சண்முகம்,கண்ணையன் உள்பட பலர் பங்கேற்றனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபெற்ற விழாவில் நகர செயலர் கணேஷ்குமார் தலைமை வகித்தார். நகரில் அனைத்து வார்டுகளிலும் கட்சிக்கொடி ஏற்றி வைக்கபட்டு, பொதுமக்களுக்கு இனிப்புகள், அன்னதானம் வழங்கப்பட்டன. நிர்வாகிகள் கார்த்திகேயன், மனோகரன், ஈஸ்வரன், அசோகன் உள்பட பலர் பங்கேற்றனர்.

ஆனங்கூர் பிரிவு சாலையில் உள்ள சுமைதூக்கும் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற விழாவில், நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் பங்கேற்று, தொழிற்சங்க கொடியேற்றி வைத்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

Tags:    

Similar News