குமாரபாளையம் அருகே சிருஷ்டி விநாயகர் கோயிலில் கும்பாபிஷேக விழா
குமாரபாளையம் அருகே சிருஷ்டி விநாயகர் கோயிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.;
குமாரபாளையம் அருகே மோளகவுண்டம்பாளையம் பகுதியில் சிருஷ்டி விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே மோளகவுண்டம்பாளையம் பகுதியில் சிருஷ்டி விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழாவையொட்டி நேற்றுமுன்தினம் காவிரி ஆற்றிலிருந்து தீர்தக்குடங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன.
இதையடுத்து மூன்று கால யாக சாலை பூஜைகள், கோபுர கலசம் வைத்தல், சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. நேற்று காலை 06:00 மணியளவில் மகா கும்பாபிஷேக விழாவை யொட்டி, கோபுர கலசத்திற்கு, சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றினார்கள். சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடைபெற்றன. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன.
இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர். யாகசாலை மற்றும் கும்பாபிஷேக விழாவை சித்தோடு, காமாட்சி அம்மன் உடனமர் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் அர்ச்சகர்கள் ஜனார்தன சிவாச்சாரியார், குமாரபாளையம் அரவிந்த் சிவாச்சாரியார் மற்றும் குழுவினர் நடத்தினர்.