சென்னை நகராட்சி இயக்குனரிடம் குமாரபாளையம் சேர்மன் மனு

சென்னை நகராட்சி இயக்குனரிடம் குமாரபாளையம் நகராட்சி சேர்மன் வளர்ச்சி திட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி மனு வழங்கினார்.;

Update: 2023-04-14 01:30 GMT

சென்னை நகராட்சி இயக்குனரிடம் குமாரபாளையம் நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் வளர்ச்சி திட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி மனு வழங்கினார்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அம்மன் நகர் சாலை சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுமக்கள் ஆக்கிரமிப்பு காரணமாக புதிய தார் சாலை அமைக்க முடியாமல் இருந்து வந்தது. நீதிமன்ற நடவடிக்கை மேற்கொண்ட நகராட்சி நிர்வாகத்தினர், அனைத்து வழக்குகளிலும் வெற்றி பெற்று, சாலை அமைக்க வரைபடம் மற்றும் திட்ட மதிப்பீடு அரசுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த சாலை சம்பந்தமாக ஒவ்வொரு நகரமன்ற கூட்டத்திலும் பெரும் சர்ச்சை எழுந்து வருகிறது. இதன் பொருட்டு சென்னை நகராட்சி இயக்குனர் அலுவலகம் சென்ற, குமாரபாளையம் நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன், அம்மன் நகர் சாலை அமைக்கவும், பல வளர்ச்சித்திட்ட பணிகள் மேற்கொள்ளவும் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டி, நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையாவிடம் மனு கொடுத்துள்ளார். இந்த மனு தொடர்பாக பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக பொன்னையா கூறியுள்ளார். கவுன்சிலர் ஜேம்ஸ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

அம்மா உணவகத்தில் சேர்மன் ஆய்வு

குமாரபாளையம் அம்மா உணவகத்தில் நாள் ஒன்றுக்கு ஆயிரம் பேருக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. இங்கு நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் திடீர் ஆய்வு செய்து, தயார் செய்து வைக்கப்பட்ட உணவினை சுவைத்து பார்த்தார். பொதுமக்கள் நிம்மதியாக சாப்பிட்டு செல்லும் வகையில் தரமான உணவு வழங்கி, அன்புடன் பரிமாற வேண்டும் என்று கூறியதுடன், அம்மா உணவகத்திற்கு தேவையான உதவிகளை செய்து தருவதாக சேர்மன், அம்மா உணவக ஊழியர்களிடம் உறுதி கூறினார்.

நாமக்கல் மாவட்ட மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நடமாடும் மருத்துவ குழுவினர், பொதுமக்கள் இருக்கும் இடம் தேடி சென்று சிகிச்சை செய்து வருகிறார்கள். இதற்கான முகாமினை சேர்மன் விஜய்கண்ணன் துவக்கி வைத்தார். காய்ச்சல், சளி, இருமல், நீரிழிவு நோய்கள் உள்ளதட பல நோய்களுக்கு மருந்துகள் வழங்கப்பட்டன.

குமாரபாளையம் அப்பன் பங்களா பகுதியில் கோம்பு பள்ளம் ஓடையின் குறுக்கே மூலதன மானிய நிதி திட்டத்தின் கீழ் 2 கோடி மதிப்பில் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பாலம் கட்டுமான பணியை சேர்மன் விஜய் கண்ணன் ஆய்வு செய்தார். பாலம் கட்டுமான பணியை விரைந்து முடித்து வாகன போக்குவரத்திற்கு வழிவிட வேண்டும் என அறிவுறுத்தினார்.

இதில் ஆணையாளர் ராஜேந்திரன் (பொ), நிர்வாகிகள் செல்வராஜ், செந்தில்குமார், ஆனந்தன், இனியாராஜ் உள்பட பலர் உடனிருந்தனர்.

வாடகை செலுத்தாத நகராட்சி கடையினருக்கு நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை

குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட், வார சந்தை வளாகம், பாலக்கரை உள்ளிட்ட பல இடங்களில் நகராட்சி கடைகள் உள்ளன. இதில் பலரும் கடைகள் வைத்து வியாபாரம் செய்து வருகிறார்கள். பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் தற்போது தினசரி காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. பஸ் ஸ்டாண்ட் கடைகள் இரு பகுதியில் உள்ளன. ஒரு பக்கம் பேருந்துகள் வந்து செல்லும் பகுதியிலும், மற்றொரு பக்கம் மார்க்கெட் செயல்படும் பகுதியிலும் உள்ளன. மார்க்கெட் செயல்படும் பகுதியில் இருக்கும் நகராட்சி கடையினர், போதிய வருமானம் இல்லாமல் இருப்பதாக கூறி வருகின்றனர்.

வாடகை நிலுவை உள்ள கடையினர் வசம், ஆணையர் (பொ) ராஜேந்திரன் தலைமையில் நகராட்சி நிர்வாகத்தினர் வாடகையை செலுத்த சொல்லி நேரில் அறிவுறித்தினர். ஒரு சிலர் வாடகையை செலுத்தினர். சிலர் ஓரிரு நாட்கள் அவகாசம் கேட்டுள்ளனர். குறிப்பிட்ட காலத்தில் வாடகை செலுத்தாத கடைகள் சீல் வைக்கபடும் என எச்சரித்தனர்.

Tags:    

Similar News