அரசு பள்ளியில் ஆங்கில பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்

குமாரபாளையம் அரசு பள்ளியில் ஆங்கில பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.;

Update: 2021-08-16 16:15 GMT

தளிர்விடும் பாரதம் சார்பில் அரசு பள்ளியில் இலவச ஆங்கில வகுப்பு பயின்றவர்களுக்கு நடந்த சான்றிதழ் வழங்கும் விழாவில் நகர திமுக பொறுப்பாளர் செல்வம் பங்கேற்று சான்றிதழ்களை வழங்கினார். 

குமாரபாளையம் தளிர்விடும் பாரதம், வெஸ்ட்வெலி போனடிக்ஸ் பொதுநல அமைப்பின் சார்பில் சின்னப்பநாயக்கன் பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் துவக்கப்பள்ளியில் இலவச ஆங்கில பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. இரண்டு மாத காலம் நடைபெற்ற இந்த பயிற்சி நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு தலைமை ஆசிரியைகள் வெண்ணிலா, கற்பகம் தலைமையில் நடைபெற்றது. இதில் 75 மாணவ, மாணவியர்களுக்கு நகர திமுக பொறுப்பாளர் செல்வம் சான்றிதழ்களை வழங்கினார். நிர்வாகிகள் சீனிவாசன், பிரபு, வரதராஜ், மோகன் உள்பட பலர் பங்கேற்றனர்.


Tags:    

Similar News