ராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரியில் அரசு தட்டச்சு தேர்வு
குமாரபாளையம் ராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரியில் அரசு தட்டச்சு தேர்வு நடந்தது.
ராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரியில் அரசு தட்டச்சு தேர்வு
குமாரபாளையம் ராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரியில் அரசு தட்டச்சு தேர்வு நடந்தது.
தமிழ் நாடு அரசு தட்டச்சு தேர்வு குமாரபாளையம் ஸ்ரீ ராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரியில் ஆண்டுதோறும் நடப்பது வழக்கம். குமாரபாளையம் ஸ்ரீ ராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரியில் தமிழ்நாடு அரசு தொழில் நுட்ப கல்வி இயக்கத்தின் சார்பாக இளநிலை மற்றும் முதுநிலை தட்டச்சு தேர்வுகள் நடந்தன. இதில் 26க்கும் மேற்பட்ட தட்டச்சு பயிற்சி மையங்களைச் சேர்ந்த ஆயிரத்து 300 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பங்கேற்றனர். தற்போது தமிழக அரசு வேலை வாய்ப்பில் தட்டச்சு தொடர்பான வேலைவாய்ப்பு அதிக அளவில் உள்ளதால் மாணவ மாணவிகள் அரசு வேலை வாய்ப்பு பெறுவதற்காக ஆர்வத்துடன் இந்த தேர்வில் பங்கேற்றனர். கல்லூரி முதல்வர் விஜயகுமார் தேர்வு கண்காணிப்பாளராக பங்கேற்று நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
குமாரபாளையம் நகராட்சியில் தமிழக முதல்வர் உத்தரவுக்கிணங்க, நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தில், என் குப்பை எனது பொறுப்பு மற்றும் பொதுமக்கள் பங்களிப்போடு நகரங்களை பொது இடங்களை தூய்மை செய்தல் பணி நடைபெற்று வருகிறது. பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் உருவாகும் மக்கும் மக்காத குப்பைகளை தரம் தரம் பிரித்து கொடுத்தல், நெகிழி பயன்பாடு தடை பற்றியும், அதற்கு மாற்று பொருளாக துணிப் பைகள் பாத்திரங்கள் பயன்படுத்துதல் பற்றியும், திறந்த வெளி கழிப்பிடத்தை பயன்படுத்த தடை மற்றும் சுற்றுச்சூழல் சுற்றுச்சூழலை பாதுகாக்க மரக்கன்று நடுதல் பற்றியும், எடுத்துரைக்கப்படுகிறது. உத்தரவின் படி ராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரியில், முதல்வர் விஜயகுமார் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சுகாதார அலுவலர் ராமமூர்த்தி பங்கேற்று, மாணவ, மாணவியர்களிடையே சுகாதார பணிகள் மேற்கொள்ளுதல் குறித்து விளக்கவுரையாற்றினார். துப்புரவு ஆய்வாளர்கள் சந்தானகிருஷ்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.