பள்ளிபாளையத்தில் போலி மருத்துவர் கைது: போலீசார் விசாரணை

பள்ளிபாளையத்தில் போலி மருத்துவர் கைது செய்யப்பட்டு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்..;

Update: 2023-04-20 01:45 GMT

கைது செய்யப்பட்ட போலி மருத்துவர்.

பள்ளிபாளையம் அக்ரஹாரம் பகுதியில்,ஒரு முதியவர் வீடு வீடாக சென்று மருத்துவம் பார்ப்பதாகவும், அவர் மருத்துவம் படிக்காமல் தொடர்ந்து பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து,ஊசி போடுவது மாத்திரை வழங்கி வருவதாக பள்ளிபாளையம் அரசு மருத்துவனை மருத்துவர் வீரமணிக்கு தகவல் கிடைத்தது.

இது அவர் குறித்து நாமக்கல் மாவட்ட மருத்துவ இணை இயக்குனர். ராஜ்மோகனுக்கு தகவல் அளித்தார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்பொழுது அவர் மருத்துவர்கள் பயன்படுத்தும் மாத்திரைகள், ஸ்டெதஸ்கோப்,மருந்துகள், ஏர் பீஸ் ஆகியவற்றை பயன்படுத்தி பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்ததை கண்டறிந்தனர்.

மேலும் விசாரணையில் அவர் பெயர் ஐய்யாவு, வயது 72- என்பதும், 20-வருடங்களுக்கு முன்பு மெடிக்கல் ஷாப்பில் பணி புரிந்துள்ளார் என்பதும்,அதை அனுபவமாக வைத்து, வயதான நோயாளிகளுக்கு வீடு தேடி சென்று மருந்து கொடுப்பதும், ஊசி போடுவதும் தெரியவந்தது.

இதனையடுத்து பள்ளிபாளையம் அரசு தலைமை மருத்துவர் வீரமணி பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பள்ளிபாளையம் இன்ஸ்பெக்டர் சந்திரகுமார் உத்தரவின் பேரில், சப்-இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், சேகர் ஆகியோர் அய்யாவுவை கைது செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவமானது பள்ளிப்பாளையம் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Tags:    

Similar News