குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசி : தற்காலிக நிறுத்தம்

குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தற்காலிகமாக நிறுத்தபட்டுள்ளதாக தலைமை டாக்டர் தெரிவித்துள்ளார்.

Update: 2021-04-21 07:45 GMT

கொரோனா தடுப்பூசி போடுதல் (மாதிரி படம்)

குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரி தலைமை டாக்டர் தெரிவித்துள்ளார்.

குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி, சுகாதாரத்துறையினர், போலீஸ் துறையினர் மற்றும்  வருவாய்த்துறையினர்  உள்ளிட்ட அரசுத்துறை பணியாளர்கள், பொதுமக்கள் ஆகியோருக்கு செலுத்தப்பட்டு வந்தது.  தற்போது தடுப்பூசி மருந்து இருப்பு இல்லாததால் தடுப்பூசி செலுத்துவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, குமாரபாளையம் அரசு மருத்துவமனை தலைமை டாக்டர் பாரதி,

'குமாரபாளையம் ஆஸ்பத்திரியில்  கொரோனா தடுப்பூசி 45 முதல் 59 வயது வரையிலானவர்களுக்கு செலுத்தப்பட்டு வந்தது. அதில் முதல் ஊசி 696 பேருக்கும், 2வது ஊசி ஒன்பது பேருக்கும் போடப்பட்டுள்ளது. 60 வயதுக்கு  மேற்பட்டவர்களுக்கு முதல் ஊசி ஆயிரத்து 99 பேருக்கும், இரண்டாவது ஊசி 35 பேருக்கும்  செலுத்தப்பட்டுள்ளது. தற்போது தடுப்பூசி மருந்து ஸ்டாக் இல்லை. அதனால், தடுப்பூசி போடும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மருந்து வந்ததும் மீண்டும் தடுப்பூசி செலுத்தும் பணி தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.

வட்டார மருத்துவ அலுவலர் ரேவதி கூறியதாவது: வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில் போடப்பட்டு வந்த கொரோனா தடுப்பூசி போடும் பணியை  தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம். மருந்து ஸ்டாக் இல்லை. மருந்து வந்ததும் மீண்டும் தடுப்பூசி போடப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

Tags:    

Similar News