குமாரபாளையம் அருகே பஸ்- சரக்கு வாகனம் மோதல்: கிரைம் செய்திகள்..
குமாரபாளையம் அருகே அரசு பஸ் மீது சரக்கு வாகனம் மோதியதில் சரக்கு வாகன ஓட்டுநர் படுகாயமடைந்தார்.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் சேலம் கோவை புறவழிச்சாலை டீச்சர்ஸ் காலனி சர்வீஸ் சாலையிலிருந்துதான், குமாரபாளையத்திலிருந்து பவானி செல்லும் அனைத்து வாகனங்களும் சென்றாக வேண்டும். நேற்று இரவு 07:00 மணியளவில் அரசு பஸ் பவானி செல்வதற்காக சர்வீஸ் சாலையிலிருந்து புறவழிச்சாலையில் திரும்பியது. அ
ப்போது சேலத்திலிருந்து கோவை நோக்கி சென்ற ஈச்சர் சரக்கு வாகனம், அரசு பஸ் பின்பகுதியில் வேகமாக மோதியது. இதில் பஸ்ஸின் பின்புற கண்ணாடி உடைந்ததுடன், பின்புற பகுதி சேதமானது. சரக்கு வாகனத்தின் முன்புற பகுதி சேதமானதுடன், அதன் ஓட்டுநர் சேலத்தை சேர்ந்த செல்வகுமார், 27, பலத்த காயமடைந்தார்.
பஸ்ஸில் பின் சீட்டில் பயணிகள் இல்லாததால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லாமல் போனது. இது குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
இரு பிரிவினரிடையே வேலி அமைப்பதில் முரண்பாடு
குமாரபாளையம் அருகே இரு பிரிவினரிடையே வேலி அமைப்பதில் முரண்பாடு ஏற்பட்டதால் போலீசார் நேரில் விசாரணை செய்தனர்.
குமாரபாளையம் தட்டான்குட்டை ஊராட்சி, எதிர்மேடு பகுதியில் ஒரு பிரிவினர் தங்கள் நிலத்திற்கு கம்பி வேலி அமைத்தனர். அந்த இடத்தில் அருகில் உள்ள நில உரிமையாளர்கள் தங்கள் நிலத்தை சேர்த்து வேலி அமைப்பதாக வாய்த் தகராறில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த குமாரபாளையம் போலீசார் நேரில் சென்று விசாரணை செய்தனர். வேலி அமைக்கும் தரப்பினர் அதிக ஆள் பலத்துடன் வந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.