குமாரபாளையம் அருகே என்சிசி மாணவர்களுக்கு பாராட்டு
குமாரபாளையம் அருகே என்.சி.சி. மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.;
குமாரபாளையம் அருகே என்.சி.சி. மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே என்.சி.சி. சார்பில் மண்டல அளவிலான சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் துப்பாக்கி சுடுதல் பிரிவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக கமோடர் அடுல்குமார் ரஸ்டோகி பங்கேற்று, முதல் பரிசு பெற்ற கோவை அணியினருக்கும், இரண்டாம் பரிசு பெற்ற மதுரை அணியினருக்கும் வழங்கி வாழ்த்தி பேசினார். கோவை என்.சி.சி. குரூப் கமாண்டர் கர்னல் சிவா, கர்னல் ஜெய்தீப், லெப்டினன்ட் கர்னல் கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர். துப்பாக்கி சுடும் போட்டியில் கோவை அணியினர் தொடர்ந்து முதலிடம் பெற்று வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
தமிழ்நாடு, பாண்டிச்சேரி மற்றும் அந்தமான் நிகோபார் தேசிய மாணவர் படை இயக்குனரகத்தின் கீழ் இயங்கும் பட்டாலியனில் சிறந்த இரண்டாவது பட்டாலியனாக ஈரோடு 15வது பட்டாலியன் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான கோப்பையை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, தயாநிதி மாறன் ஆகியோர் ஈரோடு 15வது பட்டாலியன் கமாண்டிங் அலுவலர் கர்னல் ஜெய்தீப், சுபேதார் மேஜர் செந்தில்குமார் ஆகியோரிடம் வழங்கினார்கள். இரண்டாமிட விருது பெற்றதையொட்டி தமிழ்நாடு, பாண்டிச்சேரி மற்றும் அந்தமான் நிகோபார் தேசிய மாணவர் படை இயக்குனரகத்தின் கமோடர் அட்டுல் குமார் ராஸ்டோகி மற்றும் கோவை குரூப் கமாண்டர் ராவ் பாராட்டினர். ஈரோடு 15வது பட்டாலியன் லெப்டினன்ட் கர்னல் நிர்வாக அலுவலர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் அனைத்து பள்ளி, கல்லூரிகளின் என்.சி.சி. அலுவலர்கள், மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டுதோறும் மாணவர்கள் என்.சி.சி.யில் சேர்ந்து பயிற்சி பெற்று வருகிறார்கள். இவர்களை ஊக்குவிக்கும் விதமாக, துப்பாக்கி சுடுதலில் அதிக கவனம் செலுத்திட வேண்டி குமாரபாளையம் தனியார் சேவா சங்கத்தினர் சார்பில் 4 டம்மி துப்பாக்கிகள் வழங்கப்பட்டன. இதனை சங்க நிர்வாகிகள் பள்ளியில் தலைமை ஆசிரியர் ஆடலரசு, என்.சி.சி. அலுவலர் அந்தோணிசாமியிடம் வழங்கினார்கள். இதில் சங்க நிர்வாகிகள் பலரும் பங்கேற்றார்கள்.
குமாரபாளையத்தில் என்.சி.சி. மாணவர்களுக்கு எழுத்து மற்றும் செய்முறை தேர்வு நடைபெற்றது.
இரண்டு ஆண்டுகள் என்.சி.சி. பயிற்சி முடித்த மாணவ, மாணவியர்களுக்கு எழுத்து மற்றும் செய்முறை தேர்வு ஈரோடு 15வது பட்டாலியன் சார்பில் எஸ்.எஸ்.எம்.லட்சுமியம்மாள் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது. எழுத்து தேர்வுக்கு 350 மதிப்பெண்கள், செய்முறை தேர்வுக்கு 150 மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. செய்முறை தேர்வில் துப்பாக்கியை பிரித்து பூட்டுதல், பாகங்கள் கண்டறிதல், தூரத்தை கணக்கிடுதல், வரைபட பயிற்சி, அணி வகுப்பு பயிற்சி உள்ளிட்டவைகள் செயல்படுத்தி காட்டுவார்கள். ஈரோடு ஈரோடு 15வது பட்டாலியன் சார்பில் கமாண்டிங் அலுவலர் ஜெய்தீப், நிர்வாக அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, உத்திரவின்படி சுபேதார் அன்பழகன் தலைமை வகிக்க, ஹவில்தார் விக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் தேர்வினை நடத்தினர். இந்த தேர்வில் எஸ்.எஸ்.எம். லட்சுமியம்மாள் மெட்ரிக் பள்ளி, அரசு உதவி பெறும் ஜே.கே.கே. ரங்கம்மாள் மேல்நிலைப்பள்ளி, சித்தோடு அரசு மேனிலைப்பள்ளி, குமாரபாளையம் அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளி, பர்கூர் பழங்குடியினர் அரசு உண்டு உறைவிடப்பள்ளி ஆகிய பள்ளிகளை சேர்ந்த 146 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். என்.சி.சி. அலுவலர்கள் அந்தோணிசாமி, சிவகுமார், நீலாம்பாள், முருகேசன், ராஜேஷ்குமார், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
என்.சி.சி. அலுவலர் அந்தோணிசாமி கூறுகையில், இந்த தேர்வில் வெற்றி பெற்ற சான்றிதழ் அரசு பணி நியமனத்தில் 5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. மேலும் உயர்கல்வி பயில 2 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதில் தேர்ச்சி பெற்றவர்கள் ராணுவம், கப்பற்படை, போலீஸ், வனத்துறை, தீயணைப்புத்துறை ஆகிய பணிகளில் சேர வாய்ப்பு கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.