சேவல் சண்டை சூதாட்டம் நடத்திய 6 பேர் கைது: கிரைம் செய்திகள்..
குமாரபாளையத்தில் சேவல் சண்டை சூதாட்டம் நடத்திய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.;
குமாரபாளையம் கல்லங்காட்டுவலசு பகுதியில் சேவல் சண்டை சூதாட்டம் நடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் ரவி. எஸ்.ஐ. மலர்விழி தலைமையிலான போலீசார் நேரில் சென்று பார்த்த போது சேவல் சண்டை நடந்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
இதனை நடத்திய அதே பகுதியை சேர்ந்த விவசாயி கோகுல், 23, கட்டிட கூலி ராஜகோபால், 26, பவானி, விசைத்தறி கூலி இளங்கோவன், 43, ஈரோடு, எலெக்ட்ரிசியன் தினேஷ், 29, ஈரோடு நிதி நிறுவன அதிபர் உதயன், 32, ஈரோடு, போட்டோ கடை உரிமையாளர் சிவசுப்ரமணியன், 28, ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் நான்காயிரம் ரூபாய் மதிப்புள்ள இரண்டு சேவல்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து வழக்குப்பதிவு செய்த குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
டூவீலர், லாரி மோதிய விபத்தில் அக்கா கண்ணெதிரே தங்கை உயிரிழப்பு
குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம், கொல்லப்பட்டி பகுதியில் வசிப்பவர் சாந்தி, 42. டைலர். இவரது தங்கை தங்கமணி, 38. கூலி. இவர்கள் இருவரும் குமாரபாளையம் வேலையாக வந்து விட்டு, ஊருக்கு திரும்பி செல்வதற்காக நேற்று காலை 10:45 மணியளவில் ஹோண்டா டியோ வாகனத்தை சாந்தி ஓட்ட, தங்கமணி பின்னால் உட்கார்ந்து வர, சேலம் கோவை புறவழிச்சாலை, கத்தேரி பிரிவு பகுதியில் சாலையை கடக்க முயற்சித்த போது, சேலம் பக்கமிருந்து வேகமாக வந்த லாரி இவர்கள் வந்த வாகனம் மீது மோதியதில், சாந்தி கண்ணெதிரே தங்கமணி சம்பவ இடத்தில் உடல்நசுங்கி பலியானார். சாந்தி படுகாயங்களுடன் குமாரபாளையம் ஜி.ஹெச்.ல் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
ஏ.டி.எம்.ல் பணம் எடுக்க சென்றவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
குமாரபாளையம் சானார்பாளையம் பகுதியில் வசித்து வந்தவர்கள், குணசேகரன், 83, உஷாராணி, 60, தம்பதியர். இவர்களுக்கு பிரபாகரன், சசிகலா, ஜமுனாதேவி, ரூபாகலாதேவி ஆகிய மகன், மகள்கள் உள்ளனர். அனவைருக்கும் திருமணமாகி, தனியே வசித்து வருகின்றனர்.
பெற்றோர் இருவரும் குமாரபாளையம் அருகே சேலம் கோவை புறவழிச்சாலை, எதிர்மேடு தனியார் கல்லூரி பின்புறம் உள்ள அன்னை ஆதரவற்றோர் மையத்தில் தங்கி வாழ்ந்து வந்தனர். ஜன. 8ல் மாலை 04:00 மணியளவில் பணம் தேவை இருந்ததால், இருவரும் டி.வி.எஸ். வாகனத்தில் சென்று, எதிர்மேடு தனியார் கல்லூரி முன்பிருந்த ஏ.டி.எம். மையத்திற்கு சென்றனர்.
இருவருக்கும் ரத்தகொதிப்பு இருந்ததால், இருவரும் அங்கேயே மயங்கி விழுந்தனர். அருகில் இருந்தவர்கள் மீட்டு ஈரோடு ஜி.ஹெச்.ல் சேர்த்தனர். சிகிச்சையிலிருந்த உஷாராணி நேற்று அதிகாலை 03:45 மணியளவில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
பணம் வைத்து சூதாடிய 8 பேர் கைது
குமாரபாளையத்தில் பணம் வைத்து சூதாடிய 8 பேர் கைது கைது செய்யப்பட்டனர்.
குமாரபாளையம் விட்டலபுரி, பாண்டுரங்கர் கோவில் அருகே பழனிசாமி விசைத்தறி பட்டறை அருகே பணம் வைத்து சூதாட்டம் ஆடுவதாக குமாரபாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்படி இன்ஸ்பெக்டர் ரவி, எஸ்.ஐ. மலர்விழி உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்ததில், அங்கு ஆட்டத்திற்கு 500 ரூபாய் என பணம் வைத்து வெட்டாட்டம் ஆடிய, பழனிசாமி, 50, முருகன், 50, பெரியசாமி, 39,குமார், 54, மோகன்ராஜ், 50, மோகன், 48, குமார், 53, சந்திரசேகர், 47, ஆகிய 8 பேர் கைது செய்யப்பட்டனர். இது குறித்து வழக்குபதிவு செய்து குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
டூவீலர்கள் மோதிய விபத்தில் நிதி நிறுவன அதிபர் லாரியில் சிக்கி சம்பவ இடத்தில் உயிரிழப்பு
பள்ளிபாளையம் அக்ரஹாரம் கோட்டக்காடு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன், 36. நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவரும், இவரது நண்பர் கார்த்தி, 34, என்பவரும், நேற்று இரவு 08:00 மணியளவில் வெப்படையிலிருந்து திருச்செங்கோடு நோக்கி, ஹீரோ ஸ்பெலண்டர் வாகனத்தில் மணிகண்டன் ஓட்ட, கார்த்தி பின்னால் உட்கார்ந்து செல்கிறார்.
பாதரை அருகே செல்லும் போது, எதிரே வந்த டூவீலர் மோத, நிலை தடுமாறி அருகே சென்று கொண்டிருந்த லாரியின் அடியில் சிக்கி மணிகண்டன் தலை நசுங்கி சம்பவ இடத்தில் பலியானர். கார்த்திக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு ஈரோட்டில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
வெப்படை போலீசார் விசாரனையில் திருச்செங்கோட்டில் இருந்து எதிரே வந்த டி.வி.எஸ். ஸ்டார் சிட்டி வாகனத்தில் மணி, 26, ஓட்ட, திலீப்,27 என்பவர் பின்னால் உட்கார்ந்து கொண்டு வந்ததாக தெரியவந்தது. இவர்கள் இருவருக்கும் லேசான காயங்கள் என கூறப்படுகிறது. இவர்களும் ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து வெப்படை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.