கடையின் கூரையை உடைத்து செல்போன்கள் கொள்ளை

Update: 2021-03-22 09:44 GMT

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் செல்போன் கடையின் மேற்கூரையை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர் 4 லட்ச ரூபாய் மதிப்பிலான விலை உயர்ந்த செல்போன் உள்ளிட்ட 100 செல்போன்கள் கொள்ளையடித்து சென்றுள்ளார்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சேலம் சாலையில் ஈரோடு லட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்த பிரபா சங்கர் என்பவர் கடந்த ஒரு வருடமாக விலை உயர்ந்த செல்போன் மற்றும் செல்போன் உதிரிபாகங்கள் உள்ளிட்டவை விற்பனை செய்யும் கடையினை நடத்தி வருகிறார். இந் நிலையில் நேற்று இரவு வழக்கம் போல பிரபா சங்கர் தனது கடையை மூடி விட்டு, இன்று காலை வந்து கடையை திறந்துள்ளார், அப்போது கடையின் மேற்கூரை உடைந்து இருப்பதையும் செல்போன்கள் கொள்ளை போனது கண்டும் அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து கடையின் உரிமையாளர் பிரபா சங்கர் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த குமாரபாளையம் போலீசார் கடையினுள் சோதனை செய்ததில் 20000, 10,000, 15,000 ரூபாய் உள்ளிட்ட விலை உயர்ந்த ஸ்மார்ட் போன்கள் என 100 செல்போன்கள் திருடு போனது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் கடையினுள் தடயங்களை சேகரித்தனர்.

பின்னர் கடையில் இருந்த சிசிடிவி காட்சியை சோதனை செய்து பார்த்த போது மர்ம நபர் ஒருவர் கடையின் மேற்கூரையை உடைத்து விலை உயர்ந்த செல்போன்கள் மற்றும் கல்லாவில் வைக்கப்பட்டிருந்த பணத்தை திருடும் காட்சிகளை கொண்டு குமாரபாளையம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து இப்பகுதியில் இரண்டாவது முறையாக செல்போன் கடையில் திருடு போயிருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News