வேளாங்கண்ணி மாதா பேராலயத்தின் புதிய அதிபராக இருதயராஜ் பதவி ஏற்பு

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி மாதா பேராலயத்தின் புதிய அதிபராக இருதயராஜ் பதவி ஏற்றார்.;

Update: 2021-11-16 06:14 GMT

வேளாங்கண்ணி மாதா பேராலயத்தின் புதிய அதிபராக இருதயராஜ் பதவி ஏற்றார்.

நாகை மாவட்டம்  வேளாங்கண்ணியில் உலக புகழ் பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம்  ஆன்மீக தலமாகவும்,  சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது. பசிலிக்கா அந்தஸ்து பெற்றுள்ள பேராலயத்தின் அதிபராக பிரபாகரன் பதவி வகித்து வந்தார். இந்த நிலையில் அவரது பதவிக்காலம் நிறைவு பெற்றதையடுத்து புதிய அதிபராக தஞ்சை திருஇருதய பேராலய  அதிபராக இருந்த இருதயராஜை வேளாங்கண்ணி  மாதா பேராலய அதிபராக தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் நியமித்தார்.

இதனையடுத்து புதிய அதிபர் வரவேற்பு நிகழ்ச்சியும், பழைய அதிபரை வழியனுப்பும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. நிகழ்ச்சியில்  இருதயராஜ்  வேளாங்கண்ணி பேராலய அதிபராகவும் , திருவாரூர் புனித பாத்திமா ஆலய பங்குத்தந்தையாக இருந்த உலகநாதன் பொருளாளராகவும், இமானுவேல்உதவி பங்குதந்தையாகவும் பொறுப்பேற்றுக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து  பேராலயத்தில் புதிய அதிபர் இருதயராஜ் தலைமையில் திருப்பலி நடைபெற்றது .

முன்னதாக பேராலயத்தை சுற்றி மாதா சொரூபம் அடங்கிய தேர்பவனி நடைபெற்றது. இதில் முன்னாள் அதிபர் பிரபாகர்,  பங்கு தந்தை அற்புதராஜ், உதவிப் பங்குத் தந்தையர்கள் டேவிட்தன்ராஜ், அருள் சகோதரிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

 

Tags:    

Similar News