நாகை அக்கரைப்பேட்டை ஊராட்சியில் வீட்டுக்கு வீடு தடுப்பூசி

நாகை, அக்கரைப்பேட்டை ஊராட்சி சார்பாக 5 -ம் கட்ட கொரோனா தடுப்பூசி வீடுகளுக்கே சென்று போடப்பட்டது.;

Update: 2021-06-22 15:58 GMT

நகையில் நடந்த தடுப்பூசி போடும் பணி.

நாகை அக்கரைப்பேட்டை ஊராட்சி சார்பாக 5 ஆம் கட்ட கொரோனா தடுப்பூசி வீடுகளுக்கே சென்று போடப்பட்டது.

நாகை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி அக்கரைப்பேட்டை  ஊராட்சி சார்பாக இன்று 5 -ம் கட்ட தடுப்பூசி போடும் முகாம்  நடைபெற்றது. அக்கரைப்பேட்டை ஊராட்சியை சேர்ந்த 64  மாற்று திறனாளிகளுக்கு விடுகளுக்கே சென்று தடுப்பூசி போடப்பட்டது, சுமார் 700 பயனாளிகளுக்கு கோவிசீல்டு தடுப்பூசி போடப்பட்டது. ஒரு வாரக்காலத்திற்குள் ஊராட்சி முழுவதும் தடுப்பூசி அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும்  என  ஊராட்சி மன்றத்தலைவி அழியாநிதிமனோகரன் தெரிவித்துள்ளார்.



Tags:    

Similar News