வேளாங்கண்ணியில் தொடர் விடுமுறையை கொண்டாட குவிந்த சுற்றுலா பயணிகள்
தீபாவளி பண்டிகை விடுமுறையால் குடும்பத்துடன் சுற்றுலா பயணிகள் வேளாங்கண்ணியில் குவிந்துள்ளனர்.;
தீபாவளி விடுமுறையையொட்டி வேளாங்கண்ணியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
நாகப்பட்டிணம் மாவட்டம் வேளாங்கண்ணியில் உலக புகழ் பெற்றதும் கீழ்திசை நாடுகளின் லூர்து நகரம் என அழைக்கப்படும் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் ஆன்மிக தளமாகவும், சுற்றுலா தளமாகவும் அமைந்துள்ளது. அதன்படி இன்று தீபாவளி பண்டிகை விடுமுறையால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து குடும்பத்துடன் சுற்றுலா பயணிகள் வேளாங்கண்ணியில் குவிந்துள்ளனர்.
பேராலயத்தில் நடைபெறும் திருப்பலிகளிலும்,பழையமாதாஆலயம்,நடுத்திட்டு,தியானகூடம்,சிலுவைபாதை,சிறுவர் பூங்கா, உள்ளிட்ட இடங்களிலும் கடற்கரையில் குடும்பத்துடனும்,நண்பர்கலுடனும் கடலில் நீராடியும் குடும்பத்தினருடனும் , நண்பர்களுடன் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர் இதனால் மனஇறுக்கம் விலகி மனமகிழ்ச்சி ஏற்பட்டு உள்ளதாக தெரிவித்தனர்.