நாகை சார்-பதிவாளர் அலுவலகம் இடம் மாற்றத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

நாகை சார்- பதிவாளர் அலுவலகம் மாற்றத்தை கண்டித்து முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-01-04 15:26 GMT

சார்பதிவாளர் அலுவலகம் இடமாற்றம் கண்டித்து நாகையில் அ.தி.முக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணியை அடுத்த திருப்பூண்டியில் 1884ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சார்-பதிவாளர் அலுவலகம் தொடர்ந்து 138 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 28கிராம மக்கள் திருமண பதிவு மற்றும் சொத்து பதிவு உள்ளிட்ட பதிவுகளை மேற்கொள்ள மையப் பகுதியாக இந்த இடம் விளங்கி வருகிறது. இந்நிலையில் இந்த சார்பதிவாளர் அலுவலகத்தை கீழ்வேளூருக்கு மாற்றம் செய்யும் நடவடிக்கையை உடனடியாக திரும்பப் பெறக் கோரி அ.இ.அ.தி.மு.க மற்றும் கூட்டணி கட்சியினர் சார்பில் திருப்பூண்டி கடைத்தெரு பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முன்னாள் அமைச்சரும் வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினருமான ஓ.எஸ். மணியன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 500 க்கும் மேற்பட்ட அ.தி.மு.க. தொண்டர்கள் பங்கேற்று சார்- பதிவாளர் இடமாற்றத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கண்டன கோஷம் எழுப்பினர்.


தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய  முன்னாள் அமைச்சர் ஓ. எஸ். மணியன் முதலமைச்சர் ஸ்டாலின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை வஞ்சித்து விட்டார். ஏதோ நிவாரணம் வழங்குவது போல ஒரு அறிவிப்பை வெளியிட்டு விட்டு அந்த அறிவிப்பு வெற்று அறிவிப்பாக எந்த ஒரு உதவியும் எவருக்கும் கிடைக்காத ஒரு அறிவிப்பாக கொடுத்துவிட்டு இன்றைக்கு இடுபொருள் வழங்குகிறோம் என்று சொன்னவர்கள் அதையும் வழங்காமல் வெள்ள நிவாரணம் வழங்காமல்  பொங்கலுக்கு பரிசு பணம் எதுவும் வழங்காமல் தொகுப்பு மட்டும் வழங்கி இருக்கிறார்கள் என்றார்.

Tags:    

Similar News