நாகை அருகே கருவேலங்கடை ஸ்ரீ அசகண்டவீரன் ஆலய மஹா கும்பாபிஷேகம்

நாகை அருகே கருவேலங்கடை ஸ்ரீ அசகண்டவீரன் ஆலய மஹா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடந்தது.;

Update: 2022-03-09 07:57 GMT
கோவில் விமான கலசங்கள் மீது புனித நீர் 
ஊற்றப்பட்டது.

நாகப்பட்டினம் மாவட்டம், கருவேலங்கடையில் பழமை வாய்ந்த ஸ்ரீ அண்ணாக்ஷி அம்மன், ஸ்ரீ அக்கம்பிளவாய் சமேத அசகண்டவீரன் ஆலயம் அமைந்துள்ளது.இவ்வாலயத்தில் மஹா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 7-ம் தேதி காலை விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கி கணபதிஹோமம், நவக்கிரக ஹோமம், தன பூஜை, பூர்வாங்க பூஜைகளுடன் பூர்ணாஹுதி தீபாரதனை நடைப்பெற்றது.


தொடர்ந்து வாஸ்து சாந்தி, லட்சுமி ஹோமம், யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து இன்று காலை 7மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜை மற்றும் மகா பூர்ணாஹுதி நடைபெற்றது.தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க, சிவாச்சாரியார்கள் கடத்தை சுமந்து கோவிலை வலம் வந்து ஸ்ரீ அசகண்ட வீரன் ஆலய கலசத்தில், புனித நீர் ஊற்றப்பட்டு மகாகும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.அதனைத்தொடர்ந்து புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. அதன் பின்னர் நடைபெற்ற சிறப்பு தீபாராதனையில் திரளான பக்தர்கள் பங்கேற்று மனமுருகி வழிபட்டனர்.

Tags:    

Similar News