நாகப்பட்டிணம் மாவட்டம் திருக்குவளை அருகேயுள்ள எட்டுக்குடி ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் சித்திரை திருவிழாவின் 9ம் நாளான வெள்ளித்தேர் உற்சவம் நடைபெற்றது.
முருகனின் ஆதி படை வீடு என அழைக்கப்படும் எட்டுக்குடி அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சித்திரைத் திருவிழாவானது கொரோனா பரவல் காரணமாக தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறை மற்றும் இந்து சமய அறநிலை சார்பில் குறிப்பிடப்பட்டுள்ள சுற்றறிக்கையின் படி கொரனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டு நடைபெற்று வருகிறது. சித்திரை திருவிழாவின் 9ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு காரணமாக கோவிலின் முகப்பு பகுதி கதவு பூட்டப்பட்டு, உட்பிரகாரத்தின் உள்ளே வெள்ளி தேர் சிவாச்சாரியர்களால் இழுக்கப்பட்டது.
வெள்ளித் தேரில் ஆறுமுக வேலவர், மேளதாளங்கள் முழங்க பல வண்ண மலர் அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். முழு ஊரடங்கு காரணமாக கோவில் பணியாளர்கள் மற்றும் சிவாச்சாரியர்கள் தவிர வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை.