நாகை மாவட்டத்தில் தொடர் மழையால் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்

நாகை மாவட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த சுமார் 500க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பிலான சம்பா தாளடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.

Update: 2021-11-07 07:54 GMT

நாகை மாவட்டத்தில் பலத்த மழையினால் நெய்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்னதாகவே நாகை மாவட்டத்தில் பரவலாக கன மழைப் பொழிவு இருந்து வந்தது. இந்நிலையில் வட கிழக்கு பருவமழைத் தொடக்கம் முதல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்தது. இந்த மழையால், கீழ்வேளூர் வட்டத்திற்கு உட்பட்ட வடக்குவெளி, கர்ணாவெளி, ஆளக்ககரை வேலூர் உள்ளிட்ட கிராமங்களில், தாழ்வான பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த சுமார் 500க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பிலான சம்பா தாளடி நெல்பயிர்கள் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளது.


இதனால்அந்தப் பகுதிகளைச்சேர்ந்த விவசாயிகள் மிகுந்த வேதனையில் உள்ளனர். ஏக்கருக்கு சுமார் 30 ஆயிரம் வரை செலவிட்டு நடவுப் பணிகளை மேற்கொண்டு பதினைந்தே நாட்கள் ஆன நிலையில் நெற்பயிர்கள் அருகில் இருப்பது விவசாயிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இப்பகுதியில் போதிய அளவுக்கு வடிகால் வசதியில்லாததால் 500க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள சம்பா,தாளடி நெல் பயிர்கள் நீரில் மூழ்கிஅழுகியுள்ளது.பருவமழை நீடித்தால் பாதிப்பு மேலும் அதிகரிக்கும்.வேளாண்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பயிர்களைப் பார்வையிட்டு . மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கவேண்டும் என வடக்குவெளி பகுதி விவசாயிகள் தமிழக அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags:    

Similar News