நாகையிலிருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடந்த முயன்ற 3 பேர் கைது

நாகையில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்த முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர். அரிசி மூட்டைகளும் பறிமுதல் ஆனது.

Update: 2021-12-12 12:20 GMT

நாகையில் இருந்து கேரளாவிற்கு கடத்த முயன்ற அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழக அரசால் வழங்கப்படும் குடும்ப அட்டைதாரர்களுக்கான அரிசி மூட்டைகளை நாகை அருகே வடுகச்சேரி கிராமத்தில் நியாயவிலை கடை முன்பு வைத்து மற்றொரு வாகனத்தில் மாற்றியுள்ளனர், அங்கு வந்த ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் கிராம மக்கள் இரவு நேரத்தில் என்ன செய்கிறீர்கள் என கேட்ட போது வாகனத்தை மோதுவது போல் இயக்கியதால் இருசக்கர வாகனத்தை லாரி முன்பு நிறுத்திய கிராம மக்கள் கடத்தல் வாகனத்தை சிறைபிடித்து வட்டாட்சியர், காவல்துறை உள்ளிட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் உள்ள வியாபாரி தமிழகப் பகுதியில் உள்ள மோட்டாரக அரிசியை வாகனத்தில் எடுத்துவர அனுப்பியுள்ளதாகவும் வடுகச்சேரி உள்ளிட்ட இரண்டு இடங்களில் அரிசி அரிசி மூட்டைகளை ஏற்றியதாக வாகன ஓட்டுனர் தெரிவித்துள்ளார். பின்னர் வாகனத்தை சோதனையிட்ட போது கேரளா பதிவு கொண்ட நம்பர் பிளேட் மேல் தமிழக பதிவு எண் கொண்ட நம்பர் பிளேட்டை மறைத்து நூதன முறையில் தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு கடத்த இருந்த 350 மூட்டையிலிருந்த சுமார் 17,500 கிலோ ரேஷன் அரிசி இருந்ததை கண்டு காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.

அங்கு கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தையும், ரேஷன் அரிசி முட்டைகளையும் பறிமுதல் செய்து, ஓட்டுநர் உட்பட இரண்டு கேரள மாநிலத்தை சேர்ந்தவர்களை கைது செய்து விசாரணைக்காக வேளாங்கண்ணி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். காவல்துறையினரின் அடுத்த கட்ட விசாரணையில் ரேஷன் அரிசி கடத்தலில் தொடர்புடையவர்கள் குறித்து தெரியவரும் என தெரிவித்துள்ளனர்.


Tags:    

Similar News