நாகை அருகே கனமழையால் சேறும் சகதியுமான சாலையில் மக்கள் நூதன போராட்டம்

நாகை அருகே கனமழையால் சேறும் சகதியுமான சாலையில் கிராம மக்கள் நாற்று நட்டு நூதன போராட்டம் நடத்தினர்.

Update: 2022-01-18 07:59 GMT

நாகை அருகே மிக மோசமான நிலையில் உள்ள சாலை.

நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம் மடப்புரம் ஊராட்சியில் சந்திரநதி கரையில் கோவில்பத்து சாலை உள்ளது. இந்த பகுதியில் சுமார் 25 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். தற்போது இந்த சாலையில் இன்று பெய்த கன மழையினால் பாதிக்கப்பட்டு சேறும் சகதியுமாக உள்ளது. இந்த சாலை வழியாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லுபவர்கள் சிரமபட்டு வருகின்றனர். இந்த சாலையின் முகப்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் உள்ளது.

மேலும் அந்த பகுதியில் இறந்தவர்களை சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்லும்போது வழுக்கிக் கீழே விழுகின்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சாலையை சீரமைக்கக்கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த கோரிக்கையையை வலியுறுத்தி அந்த பகுதி பொதுமக்கள் சேறும் சகதியுமான மண் சாலையில் நாற்று நட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தொடர்ந்து மழை காலங்களில் இதுபோன்ற  பாதிப்புகள் ஏற்படுவதாகவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக பார்வையிட்டு மண் சாலையை தார் சாலையாக மாற்றி நிரந்தர தீர்வு செய்து தரவேண்டும் என அந்த பகுதி கிராம மக்கள் கோரிக்கை வைள்ளனர்.

Tags:    

Similar News