நாகை அருகே வேளாங்கண்ணி ஸ்ரீ ரஜதகிரீஸ்வரர் ஆலயத்தில் நவராத்திரி கொலு பூஜை விழா

ஸ்ரீரஜதகிரீஸ்வரர் ஆலயத்தில் நவராத்திரி கொலு விழா இரண்டாம் நாளை முன்னிட்டு அம்மனுக்கு கௌமாரி அலங்காரம் செய்யப்பட்டது.

Update: 2021-10-10 04:48 GMT

வேளாங்கண்ணி ஸ்ரீ ரஜதகிரீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற நவராத்திரி கொலு பூஜை விழாவில் அம்மனுக்கு கௌமாரி அலங்காரம்.

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஸ்ரீரஜதகிரீஸ்வரர் ஆலயத்தில் நவராத்திரி கொலு விழா இரண்டாம் நாளை முன்னிட்டு ஆலயத்தில் வைக்கப்பட்டிருந்த கொலுவில் வினாயகர், சரஸ்வதி, லெட்சுமி, கிருஷ்ணன், தசாவதாரம், பொண்ணு, மாப்பிள்ளை, கார்த்திகை பெண்கள் உள்ளிட்ட பலவிதமான நூற்றுக்கும் மேற்பட்ட கொலுபொம்மைகள் இடம் பெற்றிருந்தன அம்மனுக்கு பால், பன்னீர் ,சந்தனம், மஞ்சள், தேன்,பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அம்மன் கௌமாரி அலங்காரத்தில் காட்சியளித்தார்.

இதனைத் தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு உகந்த முத்துக்களால் பலவண்ணமிகு கோலப்போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு நிறைவு நாளில் பரிசுகள் வழங்கப்படுகிறது இந்த கொலு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News