நாகையில் மாங்காய் சீசன் துவங்கியது, உரிய விலை இல்லை என விவசாயிகள் வேதனை
நாகையில் மாங்காய் சீசன் துவங்கியுள்ள நிலையில் உரிய விலை, கிடைக்கவில்லை என விவசாயிகள் வேதனையடைந்து வருகின்றனர்.;
நாகப்பட்டினம் மாவட்டத்தில் காமேஷ்வரம், விழுந்தமாவடி ,தெற்கு பொய்கைநல்லூர், பிரதாபராமபுரம், , புதுப்பள்ளி, வேட்டைக்காரனிருப்பு உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் சுமார் ஆயிரம் ஏக்கரில் ருமேனியா, பங்கனப்பள்ளி, ஒட்டு, நீளம், செந்தூரா, உள்ளிட்ட மாங்காய் ரகங்கள் சாகுபடி செய்யப்பட்டது.
பழுக்க வைத்து, மாம்பழங்கள் ஆகவும், மாங்காய் ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது சீசன் துவங்கியுள்ள நிலையில் கொரானா பரவல் காரணமாக வெளி மாவட்டங்களுக்கு, வெளி மாநில ஏற்றுமதி செய்ய வியாபாரிகள் வராததால், மாங்காய் கிலோ 15முதல் 20 வரை மட்டுமே விலை போவதால் உரிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்