ஊரடங்கால் அறுவடைக்குத் தயாராக உள்ள கேழ்வரகு பாதிப்பு : விவசாயிகள் வேதனை
நாகப்பட்டினத்தில் ஊரடங்கால் அறுவடைக்கு தயாராக உள்ள கேழ்வரகு சேதமடைந்து வருவதாக விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
இயற்கை உணவான கேழ்வரகு தேவை அதிகரித்துள்ளதால் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மணல்மேடு, விழுந்தமாவடி, காமேஸ்வரம், கன்னிதோப்பு, தென்பாதி உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் கேழ்வரகு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது
தற்போது அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் தற்போது நிலவும் கொரனா ஊரடங்குஉத்தரவு காரணமாக அறுவடைக்கு ஆட்கள் வராததால் தற்பொழுது முற்றிய நிலையில் உள்ள கேழ்வரகு சேதம் அடைந்து வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்
எனவே விவசாயிகள் விளைவிக்கும் வேளாண் பொருட்களை அறுவடை செய்ய தளர்வு அளிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.