நாகை மாவட்டம் கீழ் வேளூர் திரௌபதிஅம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம்

நாகை மாவட்டம் கீழ் வேளூர் திரௌபதிஅம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம்இன்று காலை வெகு விமரிசையாக நடந்தது.

Update: 2022-02-21 05:41 GMT
கீழ் வேளூர் அருகே  இலுப்பூர் திரௌபதி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற்றது.

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த இலுப்பூரில் பழமை வாய்ந்த ஸ்ரீ திரெளபதிஅம்மன் ஆலயம் அமைந்துள்ளது.இவ்வாலயத்தில் மஹா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 19-ம் தேதி காலை விக்னேஸ்வர பூஜையுடன், கணபதிஹோமம், நவக்கிரக ஹோமம், தன பூஜை, பூர்வாங்க பூஜைகளுடன் பூர்ணாஹுதி தீபாராதனை நடைபெற்றது.

தொடர்ந்து வாஸ்து சாந்தி, லட்சுமி ஹோமம், ரக்ஷாபந்தனத்துடன் யாகசாலை பூஜைகள் நடைபெற்றது அதனை தொடர்ந்து இன்று காலை 8 மணிக்கு மேல் நான்காம் கால யாகசாலை பூஜை, கோமாதா பூஜையுடன் மகா பூர்ணாஹுதி நடைபெற்றது.மேளதாளங்கள் முழங்க, சிவாசாரியார்கள் கடத்தை சுமந்து கோவிலை வலம் வந்து திரௌபதை அம்மன்,ஶ்ரீ அய்யனார் ஶ்ரீ பச்சை முத்து மாரியம்மன் ஆலய கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு மஹாகும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.அதனைத்தொடர்ந்து புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. தொடர்ந்து, நடைபெற்ற சிறப்பு தீபாராதனையில் திரளான பக்தர்கள் பங்கேற்று மனமுருகி வழிபட்டனர்.

Tags:    

Similar News