மனநலம் பாதித்த சிறுமியை பலாத்காரம் செய்தவர் கைது
நாகையில் மனநலம் பாதித்த சிறுமியை பலாத்காரம் செய்த பால் வியாபாரியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.;
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த கருவேலங்கடை மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சுந்தரபாண்டியன்(39). பால் வியாபாரி. இவர் நாகையில் அருகே உள்ள பகுதியில் வீடுகளில் பால் வியாபாரம் செய்து கொண்டிருந்தார்.
அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் தனியாக இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமியிடம் சுந்தரபாண்டியன் கத்தியை காட்டி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது தாத்தாவிடம் தெரிவித்தார். இது குறித்து அவர் நாகை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சுந்தரபாண்டியனை கைது செய்தனர்.