நாகை பிரதாபராமபுரம் சீதாராம ஆஞ்சநேய சுவாமி மடத்தில் அனுமன் ஜெயந்தி
ராமர் வனவாசம் செல்லும் போது, ஸ்ரீ சீதாராம ஆஞ்சநேயசுவாமி ஆலயத்தில் தங்கி பூஜை செய்ததாக வரலாற்று தகவல்கள் கூறுகின்றன.;
நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி அடுத்துள்ள பிரதாபராமபுரம் ராமர்மடம் பகுதியில் ஸ்ரீ சீதாராம ஆஞ்சநேயசுவாமி மடம் உள்ளது. ஸ்ரீ ராமர் வனவாசம் செல்லும் பொழுது, இவ்வாலயத்தில் வந்து தங்கி பூஜை செய்ததாக புராணக்குறிப்புகள் உள்ளன.
இவ்வாலயத்தில், ஒவ்வொரு மாத அமாவாசை தோறும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன . அதன்படி மார்கழி மாத அமாவாசை மற்றும் அனுமன் ஜெயந்தி முன்னிட்டு, வெற்றிலை, துளசி எலுமிச்சம்பழம், மற்றும் மறுகை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்விக்கப்பட்டு, 5108 வடமாலை சார்த்தப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று அனுமனை வழிபட்டு சென்றனர்.