வரும் 30ஆம் தேதி முதல் மீன்பிடிக்க ஆழ்கடலுக்கு செல்ல மீனவர்கள் முடிவு

நாகை மற்றும் காரைக்கால் மாவட்ட விசைப்படகு மீனவர்கள் வாழ்வாதாரம் கருதி வரும் 30ஆம் தேதி முதல் ஆழ்கடலுக்கு மீன்பிடிப்புக்கு செல்ல முடிவு.;

Update: 2021-06-22 16:00 GMT

மீன்களின் இனப்பெருக்கத்திற்காக ஏப்ரல் 14ஆம் தேதி முதல் 61 நாட்களுக்கு கிழக்கு கடலோர மாநில மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடிப்பு செல்ல தடை விதிக்கப்பட்டது. கடந்த ஜூன் 14 ஆம் தேதி மீன்பிடி தடை காலம் முடிந்தும் தமிழகத்தில் உள்ள கடலோரப் பகுதி மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர் ஆனால் கொரோனா பரவல்  மற்றும் ஊரடங்கு காரணமாக நாகை மற்றும் காரைக்கால் மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் இருந்தனர்.

இந்த நிலையில் நாகை மீன்பிடி துறைமுகத்தில் மற்றும் காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த 37 கிராம மீனவர்களின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில்  நாகை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் குறைய தொடங்கியுள்ளதாலும், மீனவர்களின் வாழ்வாதாரம் கருதியும் வருகின்ற 30 ஆம் தேதி முதல் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல இருப்பதாக தீர்மானம் நிறைவேற்றினர். இரண்டு மாத காலங்களாக தொழிலுக்கு செல்லாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருப்பதாக வேதனை தெரிவித்துள்ள நாகை மாவட்ட மீனவர்கள், கடலுக்கு செல்வதற்கு உண்டான ஆயத்த பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறியுள்ளனர்.

Tags:    

Similar News