நாகை மாவட்டம் ஹரிஹரபுத்ர ஐயனார் ஆலய மஹாகும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் பங்கேற்பு

சமேத ஹரகஹரபுத்ர ஐயனார் , பிடாரி அம்பாள் மற்றும் ஸ்ரீ வீரனார் ஆலய கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது

Update: 2022-03-13 05:33 GMT

  நாகப்பட்டினம் : ஐயனார் கோயிலில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது


ஐயனார் கோயிலில்  நடைபெற்ற கும்பாபிஷேகம், புனித நீர் உற்றுதல், தீபம் காண்பித்தல்.

நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே ஆந்தக்குடியில் அமைந்துள்ள ஸ்ரீ ஹரிஹரபுத்ர ஐயனார் ஆலய மஹா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது திரளான பக்தர்கள் பங்கேற்பு.

நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே ஆந்தக்குடியில் ஸ்ரீ ஹரிஹரபுத்ர ஐயனார் ஆலயம் அமைந்துள்ளது.இவ்வாலயத்தில் மஹா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று காலை விக்னேஸ்வர பூஜையுடன், கணபதிஹோமம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து வாஸ்து சாந்தி, யாகசாலை பிரவேசம் மற்றும் முதல் கால யாக பூஜை நடைபெற்றது. லட்சுமி ஹோமம், ரக்ஷாபந்தனத்துடன் யாகசாலை பூஜையுடன் மகா பூர்ணாஹுதி நடைபெற்றது.தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க, சிவாசாரியார்கள் கடத்தை சுமந்து கோவிலை வலம் வந்து பூர்ண புஷ்கலாம்பாள் சமேத ஸ்ரீ ஹரகஹரபுத்ர ஐயனார் , ஸ்ரீ பிடாரி அம்பாள் மற்றும் ஸ்ரீ வீரனார் ஆலய கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு மஹாகும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அப்போது புனித நீர் அங்கிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. தொடர்ந்து, நடைபெற்ற சிறப்பு தீபாராதனையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று மனமுருகி வழிபட்டனர்.


Tags:    

Similar News