நாகை மாவட்டத்தில் கிராமப்புற மாணவர்களுக்கு தற்காப்பு கலை பயிற்சி

நாகை மாவட்டத்தில் கிராமப்புற மாணவர்கள் தேசிய போட்டியில் பங்கேற்கும் வகையில் தற்காப்பு கலை பயிற்சி அளிக்கப்பட்டது.

Update: 2021-10-17 09:59 GMT

நாகை மாவட்டம் விழுந்தமாவடியில் கிராமப்புற மாணவர்களுக்கு தற்காப்பு கலை பயிற்சி அளிக்கப்பட்டது.

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த விழுந்தமாவடியில் அட்வென்ச்சர் அகாடெமி ஆப் மார்ஷ்யல் ஆர்ட்ஸ் சார்பில் கிராமப்புற மாணவர்களிடம் தற்காப்பு கலையை கொண்டு சேர்க்கும் விதமாக பல்வேறு விதமான பயிற்சிகளை அளித்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக பிளாக் பெல்ட் மாணவர்களுக்காக நடைபெற்ற பயிற்சி முகாமில் கிராம புற மாணவர்கள் பெண்களுக்கு தற்காப்பு கலையை பயின்று மாநில மற்றும் தேசிய போட்டியில் கலந்து கொள்வதற்கான கத்தா செயல் முறை விளக்கங்களும் குமிட்டே சண்டை பிரிவு நுணுக்கங்களையும் எடுத்துரைக்கப்பட்டது. மேலும் மாணவர்களுக்கு செய்முறையுடன் கூடிய பயிற்சியளித்தனர்.

Tags:    

Similar News