வடக்கு பொய்கைநல்லூர் ஸ்ரீ நந்தி நாதேஸ்வரர் ஆலயத்தில் ஊஞ்சல் உற்சவம்

மாசி மக பிரம்மோற்சவ பெருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான ஊஞ்சல் உற்சவம் விமரிசையாக நடைபெற்றது.

Update: 2022-02-21 01:30 GMT

மாசி மக பிரமோற்சவ பெருவிழாவை முன்னிட்டு வடக்கு பொய்கைநல்லூர் ஸ்ரீ நந்தி நாதேஸ்வரர் ஆலயத்தில் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.  இதில் பங்கேற்ற பக்தர்கள்.

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த வடக்குபொய்கை .நல்லூரில், பழமை வாய்ந்த ஸ்ரீ நந்தி நாதேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது ஆலயத்தின் மாசி மக பிரம்மோற்சவ பெருவிழா கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது

ஆலயத்தின் முக்கிய நிகழ்ச்சியான ஊஞ்சல் உற்சவம் நேற்று நந்திநாதேஸ்வரர், சௌந்தர நாயகி அம்மன் அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் எழுந்தருளினர். சிவாச்சாரியார்கள் பக்தி பாடல்களை பாடினர். இதனையடுத்து, மஹாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. முன்னதாக  வர்ண வினாயகர் ஆலயத்தில் பெண்கள் சீர்வரிசை எடுத்து வரப்பட்டு  அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். 

Tags:    

Similar News