வேளாங்கண்ணியில் தவக்கால சிலுவை பாதை ஊர்வலம்: திரளானாேர் பங்கேற்பு
வேளாங்கண்ணி பேராலயத்தில் தவக்காலத்தை முன்னிட்டு நடைபெற்ற சிலுவை பாதை ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு.
உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் தவக்காலத்தை முன்னிட்டு நடைபெற்ற சிலுவை பாதை ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு.
நாகப்பட்டிணம் மாவட்டம் வேளாங்கண்ணியில் உலக புகழ் பெற்ற புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் கடந்த 2ம் தேதி சாம்பல் புதன் நிகழ்ச்சியுடன் தவக்காலம் துவங்கியது. தவகாலத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமைகள் தோறும் சிலுவைப்பாதை நிகழ்ச்சி நடைபெறும். அதன்படி இன்று 2வது வார சிலுவை பாதை ஊர்வல நிகழ்ச்சி பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் நடைபெற்றது.
பேராலயத்தின் மேல் கோவிலில் இருந்து பழைய மாதா கோவில் வரை ஏசுநாதரின் பாடுகளை பற்றிய ஜெபங்களை பக்தர்கள் சிலுவையை கையில் ஏந்தி ஜெபித்துக் கொண்டு சென்றனர். இதில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்த பக்தர்கள் உதவி பங்குத்தந்தையர்கள் அருட்சகோதரிகள், உள்ளிட்ட பல்லாயிரக் கணக்கானோர் கலந்து கொண்டனர்.