நாகை பொய்கை நல்லூர் கோரக்க சித்தர் கோயிலில் ஐப்பசி பரணி விழா தொடக்கம்..

Korakka Sithar Temple-நாகை பொய்கை நல்லூரில் கோரக்க சித்தர் கோயிலில் ஐப்பசி பரணி விழா தொடங்கியது.;

Update: 2021-10-21 03:19 GMT

Korakka Sithar Temple

Korakka Sithar Temple-18 சித்தர்களில் முதன்மை சித்தரான, கோரக்கசித்தர் போகரின் ஆசிபெற்று, நாகை மாவட்டம் வடக்கு பொய்கை நல்லூரில் ஐப்பசி மாதம் பரணி நட்சத்திரத்தில் ஜீவசமாதி அடைந்தார். அதன்படி வடக்கு பொய்கை நல்லூரில் அமைந்துள்ள கோரக்க சித்தர் கோவிலில் ஐப்பசி பௌர்ணமி பரணி விழா அன்னாபிஷேக நிகழ்ச்சியுடன்  துவங்கியது.

அதனைத் தொடர்ந்து கோவில் முழுவதும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, கோரக்க சித்தருக்கு பால் மஞ்சள் சந்தனம் திருநீறு உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதன் பின்னர் மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு கோரக்கர் சித்தரை வழிபட்டு தீபம் ஏற்றி வணங்கினர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags:    

Similar News