கோகூர் புனித அந்தோணியார் ஆலய கொடியேற்றம் எளிய முறையில் நடைபெற்றது
நாகப்பட்டினம் அருகே கோகூர் புனித அந்தோணியார் ஆலயத்தில் இன்று கொடியேற்றம் நடைபெற்றது. கொரோனா பரவல் காரணமாக பெரிய தேர் பவனி ரத்து
நாகப்பட்டிணம் மாவட்டம் கீழ்வேளூரை அடுத்துள்ள கோகூர் புனித அந்தோணியார் திருத்தலம் நூற்றாண்டுகள் பழமையானதாகும், கடந்த ஆண்டு ஊரடங்கால் கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள், பள்ளிவாசல்கள் வழிபாடுகள் நடைபெறவில்லை. நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி கடந்த 5-ந்தேதியிலிருந்து முதல் ஆலயங்கள் செயல்படலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த வருடம் இன்று கோகூர் புனித அந்தோனியார் கோவில் இருந்து கொடிமரத்திற்கு, கொடி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, பங்கு தந்தை ஜான் பீட்டர் அவர்களால் புனிதம் செய்யப்பட்டு கொடி ஏற்றப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக குறைவான பக்தர்களே இதில் கலந்து கொண்டனர்.
திருவிழாவில் 10ம் நாள் பெரிய தேர்பவனி நடைபெறுவது வழக்கம். இந்த வருடம் பெரிய தேர் பவனி ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், கொடி இறக்க நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெரும் என ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.