நாகை மாவட்டம் கருங்கண்ணி புனித அந்தோணியார் ஆலய தேர்ப்பவனி
நாகை மாவட்டம் கருங்கண்ணி புனித அந்தோணியார் ஆலய தேர்ப்பவனி விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த கருங்கண்ணியில் பழைமை வாய்ந்த புனித அந்தோணியார் ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத்தின் இந்த புத்தாண்டின் முதல் செவ்வாய்க்கிழமையை முன்னிட்டும் கொரோனா நோயிலிருந்து மக்கள் அனைவரையும் பாதுகாத்திட வேண்டியும் சிறப்பு நவநாள் கூட்டுப்பாடல் திருப்பலி ஆலய பங்குத்தந்தை சவரிமுத்து அடிகளார் தலைமையில் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் எழுந்தருளிய அந்தோணியார் சொரூபம் தாங்கிய தேரை புனித நீர் தெளிக்கப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக சென்ற தேர்பவனியில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். அதனைதொடர்ந்து கண்கவர் வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது.