நாகை அருகே கதண்டு வண்டுகளை போராடி அழித்த தீயணைப்பு படையினர்
நாகை அருகே கதண்டு வண்டுகளை தீயணைப்பு துறையினர் போராடி அழித்தனர்.;
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த தெற்கு பொய்கைநல்லூர் ஊராட்சி கீழத்தெரு குடியிருப்பு பகுதியில் உள்ள இரண்டு பனைமரத்தில் கதண்டு என்ற விஷ வண்டு கூடு கட்டி பொதுமக்களை தாக்கி அச்சுறுத்தி வந்தன.
இதுபற்றிவந்த புகார்களின் அடிப்படையில் வேளாங்கண்ணி தீயணைப்பு துறையினருக்கு ஊராட்சி மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது அதன்படி அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீப்பந்தம் மூலம் விஷ வண்டுகளை அழித்தனர், இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
.